Seed Certification
விதை சுத்திகரிப்பு :: விதைச் சுத்திகரிப்பு தளங்கள்
விதைச் சுத்திகரிப்பு தளங்கள்

அரைவை, சுத்திகரிப்பு மற்றும் சான்றட்டை நிலையம்

  • விதைத் தரம் பிரிக்கத் தேவையான சல்லடைகள், பைகள் அடைக்கும் கருவி, எடைத் தராசு மற்றும் ஈரமானி.
  • மூல விதைகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட விதைகள் சேமிக்கத் தேவையான இடவசதி இருக்கவேண்டும்.
  • உலர வைக்க மற்றும் தூய்மைப்படுத்தும் தளங்கள் இருக்கவேண்டும்.
  • தேவைப்படும் அளவு மூடாக்குகள் மற்றும் பாரிபாலின்கள் (Tarpaulin) இருக்கவேண்டும்.
  • தரம் பிரிக்கும் கருவி, ஒப்பு அடர்த்தி பிரிப்பான், பஞ்சு நீக்கும் கருவி போன்றவை இருக்கவேண்டும்.
பஞ்சு நீக்குதல்
  • பஞ்சு நீக்குதலுக்கு தேவைப்படும் பொருட்களும், கருவிகளும், இடம் பெறவேண்டும்.
  • சுத்திகரிக்கப்படாத மற்றும் பஞ்சு நீக்காத விதைகளை சேமிக்க இடவசதி இருக்கவேண்டும்.
  • உலர வைக்கும் மற்றும் தூய்மைப்படுத்தும் தளங்கள் இருக்கவேண்டும்.
தூய்மைப்படுத்துதல் மற்றும் சான்றட்டை பொருத்துதல்
  • காற்றோட்டம், சூரிய ஒளி மற்றும் செயற்கை ஒளிக் கட்டிடம் இருக்கவேண்டும். கட்டிடத்தின் மேற்கூரை, தரைதளம் மற்றும் சுவர்கள் நீர்க்கசிவு படியாமலும், வெடிப்பு மற்றும் துவாரங்கள் இல்லாமலும் இருக்கவேண்டும்.
  • தூய்மைப்படுத்தும், சான்றட்டைப் பொருத்த மற்றும் சேமிக்கத் தேவையான இடவசதி வேண்டும். தூய்மைப்படுத்தத் தேவையான சல்லடைகள், பைகளை அடைக்கும் கருவி, எடைத்தராசு (சிறிய அளவு) மற்றும் தேவைப்படும் மூடாக்குகள் இடம் பெற்றிருக்கவேண்டும்.
  • அங்கீகாரம் பெற்ற எந்த நிலையங்களிலும் பஞ்சு நீக்குதல் செய்யலாம். ஆனால் உரிமம் பெற மனு செய்யும் போது அதனை குறிப்பிடவேண்டும்.
  • அங்கீகாரம் பெற விரும்புபவர் இயக்குனர் (விதைச் சான்றளிப்பு) அவர்களுக்கு மாதிரிப் படிவம் (இணைப்பு XX III) கூறியபடி மனு (நான்கு பிரதிகள்) மற்றும் பரிந்துரைத்த கட்டணம் ஆகியவற்றை முறையான வழியில் அனுப்பவேண்டும். உரிமம் காலாவதி ஆகும் முன்னரே விண்ணப்பம் செய்யாவிடில், அக்காலத்திற்கு மேல் ஒரு மாதத்திற்குள் தாமதக் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். அதற்கு மேல் துணை இயக்குநர் (விதைச் சான்றளிப்பு) அவருக்கு அனுப்புவது நிராகரிக்கப்படும். அச்சமயங்களில் புதிய உரிமம் பெறவேண்டிய நிலைமை ஏற்படும்.
நிலையத்தின் உரிமையாளர் கீழ்க்கண்ட பதிவேடுகளை வைத்திருக்கவேண்டும்.
      1. சுத்திகரிப்பு மற்றும் சான்றட்டை பதிவேடு (இணைப்பு XIII)
      2. சான்றட்டை கணக்கு வழக்கு பதிவேடு (இணைப்பு XVIII)
      3. அரைவை நிலையப் பதிவேடு
      4. பஞ்சு நீக்குதல் மற்றும ்கையிருப்பு பதிவேடு
      5. விதிமுறைகள் புத்தகம்
பரிந்துரைக்கும் முன்னர், விதைச் சான்றிதழ் அலுவலர் அந்த நிலையத்தில் தேவையான குறைந்தபட்ச வரையறைகள் மற்றும் சாதனங்க்ள உள்ளதை உறுதி செய்யவேண்டும். அவருக்கு திருப்தி இல்லாவிடில், விண்ணப்படிவத்தை உரிமையாளருக்கு அக்காரணம் கூறி திருப்பி அனுப்பலாம். உரிமம் பெற தகுதி இருப்பின் துணை இயக்குநர் (விதைச் சான்றளிப்பு) அவர்களுக்கு பரிந்துரைத்து அனுப்பலாம். விண்ணப்பம் பெற்றவுடன், துணை இயக்குநர் (விதைச் சான்றளிப்பு) அவர்கள் அந்நிலையத்தை ஆய்வு செய்து பின் குறிப்புரையுடன் இணை இயக்குநர் (விதைச் சான்றளிப்பு) அவர்களுக்கு பரிந்துரைக்கலாம். இணை இயக்குநர் அவர்கள் அவ் விண்ணப்பத்தை ஆய்வு செய்து பின் அங்கீகாரம் பெற பரிந்துரைக்கலாம். புதியதாக அங்கீகாரம் பெறும் நிலையங்களை அவர் நேரில் ஆய்வு  செய்து அவர் குறிப்புரையைப் பரிந்துரைக்கவேண்டும். துணை இயக்குநர் மற்றும் இணை இயக்குநர் ஆகிய இருவரும் அங்கீகார பதிவேட்டை விதிமுறைகளின்படி (இணைப்பு XVIII) வைத்திருக்கவேண்டும்.
Updated On: Jan, 2016
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016.

Fodder Cholam